Oct 23, 2024 - 11:19 PM -
0
மண்சரிவு அபாயம் காரணமாக மாத்தறை பாடசாலை ஒன்றில் உள்ள 10 வகுப்புகளுக்கு நாளை (24) விடுமுறை வழங்க பாடசாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெலிஜ்ஜவில மகா வித்தியாலயத்தில் 6 ஆம் தரம் மற்றும் 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சகல மாணவர்களுக்கும் நாளை (24) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தெலிஜ்ஜவில மகா வித்தியாலயத்தின் 6 மற்றும் 8 தர வகுப்புகள் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தின் பின்புறத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இன்று பெய்த கனமழையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.