Oct 24, 2024 - 12:03 PM -
0
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) மற்றும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (23) இரவு இடம்பெற்றது. யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில், இலங்கைத் தமிழசுக் கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.சிறீதரன், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
--