வணிகம்
6 வது ஆண்டாகவும் உலகில் NO 1 காப்புறுதி வர்த்தகநாமமான அலியான்ஸ்!

Oct 24, 2024 - 03:03 PM -

0

6 வது ஆண்டாகவும் உலகில் NO 1  காப்புறுதி வர்த்தகநாமமான அலியான்ஸ்!

இலங்கையிலுள்ள முன்னணி காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாகவும், சர்வதேச பெருநிறுவனமான Allianz SE இன் அங்கமாகவும் இயங்கி வருகின்ற அலியான்ஸ் லங்கா, தொடர்ந்து ஆறாவது ஆண்டாகவும் Interbrand இன் மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் தரப்படுத்தலில் முதல் ஸ்தானத்திலுள்ள சர்வதேச காப்புறுதி வர்த்தகநாமமாக அங்கீகாரம் பெற்றுள்ளமை குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது. மேலும், 13% அதிகரிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் 23.56 பில்லியன் வர்த்தகநாம மதிப்புடன், ஒட்டுமொத்த தர வரிசையில் 29 வது ஸ்தானத்திற்கு அலியான்ஸ் முன்னேறியுள்ளது. இந்த சாதனையானது, உலகளாவிய காப்புறுதித் துறையில் நம்பகமான தலைவராக அதன் நிலையை உறுதிப்படுத்தி, தனித்துவமான மதிப்பு மற்றும் புதுமைகளை வழங்குவதில் அலியான்ஸின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அலியான்ஸ் லங்கா என்ற பொதுவான பெயரில் அறியப்படுகின்ற அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் மற்றும் அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் ஆகியன ஜேர்மனியின் மியூனிக் மாநகரத்தைத் தலைமையகமாகக் கொண்டு, பிரதானமாக காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வணிக சேவைகளை வழங்கி வருகின்ற உலகளாவிய நிதியியல் சேவைகள் வழங்குனரான Allianz SE இன் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனங்களாகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05