Oct 24, 2024 - 03:32 PM -
0
இஸ்ரேலுக்கு விரோதமான 105 நாடுகள் கையெழுத்து வைத்த ஆவணங்களில் இலங்கை அரசாங்கம் ஏன் கையெழுத்து வைக்கவில்லை. உடனடியாக அநுர குமார திசாநாயக்க அதில் கையெழுத்து இட வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் அசாத் சாலி தெரிவித்தார்.
இன்று (24) நடைபெற்ற ஊடகசந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றங்களில் அதிகமாக பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்தவர். ஆனால் ஆட்சிக்கு வரும் முன் ஒரு மாதிரியும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மாதிரியும் இருக்கிறார்.
அநுர குமார திசாநாயக்க பாலஸ்தீன மக்களுக்காக முன் வைத்த விடயங்கள் எல்லாம் இந்த செயற்பாட்டின் மூலம் அனைத்தும் பொய் என தெரிய வருகிறது என தெரிவித்தார்.
--