Oct 24, 2024 - 03:35 PM -
0
ஒரு நூற்றாண்டைக் கொண்டாடும் Rockland Group அண்மையில் அதன் 2024 Chairman’s Awards நிகழ்வை பிரமாண்டமான முறையில் நடத்தியது, இதனூடாக நூறு ஆண்டுகளில் அதன் திறன், சிறப்பு மற்றும் வலிமையை வெளிப்படுத்தியது. இலங்கை குடிபானத் துறையில் தனித்துவ அடையாளத்தைப் பதித்துள்ள Rockland Group, இலங்கையிலும் வெளிநாடுகளிலும் 500 இற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்து 4 தலைமுறைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றுள்ளது. 500க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மூலம் சர்வதேச சந்தையை கைப்பற்றி வரும் Rockland Group, அதன் வளமான பாரம்பரியத்தை அதே வழியில் தொடரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த Rockland Groupஇன் தலைவர் திரு. டெரிக் டி சில்வா விஜயரத்ன, செயல்திறன், பாதுகாப்பு, ஆய்வு, நேர்மை மற்றும் முழுமை ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை நிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுத்த தனித்துவமான காரணிகளாக சுட்டிக்காட்டினார்.
“ஒரு நிலையான எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்வதில் இதுவரை எங்களின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது சில சமயங்களில் நாம் மறந்துவிடக் கூடாது. நாங்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு சவாலிலும் அந்தக் காரணிகள் எங்களுக்கு பெரும் பலத்தை அளித்தன. அதனால்தான் அந்த சவால்களை எங்களால் சமாளிக்க முடிந்தது. நமது வெற்றிக்கு வழிவகுக்கும் இந்த காரணிகள் அனைத்தும் நமது எதிர்கால நடவடிக்கைகளிலும் சரியாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.” என கூறினார்.
இந்த விருது வழங்கும் நிகழ்வில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக Rockland Groupஇன் செயல்பாடுகளில் ஆற்றிய பங்கை அங்கீகரிப்பதற்காக அதன் வாய்ப்புகள் மற்றும் தொடர்புக் குழு Chairman’s Award வென்றது. அதுமட்டுமின்றி, விருது வழங்கும் நிகழ்வில் விற்பனை சிறப்பு விருதான Carl de Silva Challenge Trophy திரு. நாலக்க ஜயசிங்க வென்றார். அவரது புத்தாக்கமான சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் உறவுகள் காரணமாக அவர் அங்கு சிறந்த விற்பனையாளராக அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு, Rockland Groupஇன் Liquid Island இன் பொது முகாமையாளர் ஷலிந்திரி மாலவன, The Best Performer in Leadership award விருதை வென்றார். விற்பனையைத் தூண்டுவதிலும், மது அல்லாத பானப் பிரிவை வழிநடத்துவதிலும் அதன் சிறந்த பங்கே இதற்குக் காரணம். மேலும், அவர் முக்கிய பெருநிறுவன செயல் திட்டங்கள், தகவல்தொடர்பு மாற்றம் மற்றும் நிறுவனத்தின் உள் ஈடுபாடுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கும் தலைமை தாங்கினார். இந்த விருது வழங்கும் நிகழ்வில், நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு பிரிவு தொடர்ந்து இரண்டாவது முறையாக ‘The Best Support Function Award ஐ வென்றது சிறப்பம்சமாகும். நிறுவனத்தின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட நவீன தொழில்நுட்ப தீர்வுகளை செயல்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்காக அவர்கள் இந்த விருதைப் பெற்றனர்.
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிறுவனத்தில் 7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய 9 பாவனையாளர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை வழங்கப்படும் கஜசிங்க விருது இந்த விருது வழங்கும் நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாகும். இந்த விருதின் நோக்கம் Rockland நிறுவனத்தின் வெற்றிக்கு அந்த நபர்கள் வழங்கிய விதிவிலக்கான தலைமை, அர்ப்பணிப்பு மற்றும் ஆற்றலை மதிப்பீடு செய்து வெளிப்படுத்துவதாகும்.
பல பிரிவுகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய திறமைசாலிகளின் சிறந்து மற்றும் குழு செயற்பாடுகளை அங்கீகரிப்பதற்காக Chairman’s Awards வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, முயற்சி மற்றும் சிறந்த சேவைக்காக வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Rockland Group இன் நூற்றாண்டுப் பயணத்தை முன்னிட்டு மூன்றாவது மற்றும் நான்காம் தலைமுறை குடும்ப உறுப்பினர்களான டெரிக் டி சில்வா விஜயரத்ன, அமல் டி சில்வா விஜயரத்ன மற்றும் தேவிந்த டி சில்வா விஜயரத்ன ஆகியோருக்கு விசேட நினைவுச் சின்னமான Centenary Family Reserve வழங்கி வைக்கப்பட்டது. கடந்த நூற்றாண்டில் சவால்கள் மற்றும் சாதனைகளை எதிர்கொண்டு அவர்கள் வெளிப்படுத்திய தலைமைத்துவத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் கௌரவமாக இந்த நினைவுச் சின்னம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.