செய்திகள்
இன்னும் சில நாட்களில் நிலைமை வழமைக்கு திரும்பும்

Oct 24, 2024 - 07:27 PM -

0

இன்னும் சில நாட்களில் நிலைமை வழமைக்கு திரும்பும்

இன்னும் சில நாட்களில் ஏற்பட்டுள்ள நிலைமையை தணிக்க முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (24) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

"இந்த நிலையை இன்னும் சில நாட்களில் வழமைக்கு கொண்டு வருவோம். அப்போது அமெரிக்கா மற்றும் பல நாடுகள் வழங்கியுள்ள எச்சரிக்கை செய்தியை நீக்கலாம்.

 

நாங்கள் எடுத்த நடவடிக்கைகளில் அவர்கள் ஏற்கனவே திருப்தி அடைந்துள்ளனர், எனவே அவர்கள் தங்கள் குடிமக்களை நம் நாட்டிற்கு சுற்றுலாவிற்கு அனுப்ப நம்பிக்கையுடன் உள்ளனர். சுற்றுலா பயணிகளின் வருகையும் நிற்கவில்லை.

 

நேற்று முன்தினமும் இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு வந்திருந்தனர். அப்படி ஒரு பிரச்சனையும் இல்லை. இருப்பவர்கள் தங்கள் சுற்றுலாவை சுதந்திரமாக செய்கிறார்கள். அவர்களுக்கு எந்த தடையும் இல்லை, எனவே இந்த நிலைமையை நாங்கள் ஏற்கனவே கட்டுப்படுத்தியுள்ளோம்.

 

தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். எனவே, பதட்டப்பட வேண்டிய அவசியமில்லை.

 

தேசிய அளவில் பேசும் போது, ​​நம் நாட்டின் குடிமக்கள் குறிவைக்கப்பட்டு ஒருவித கொந்தளிப்பை உருவாக்குவதாக தெரிவிக்கப்படவில்லை.

 

 எனவே, இதுபோன்ற சூழ்நிலையில், தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது.

 

குறிப்பாக சுற்றுலாத் துறையை நடத்தும் நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறுவுறுத்தல் வழங்கியுள்ளோம், ஒவ்வொரு ஹோட்டலிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தவும் மற்றும் சோதனை செய்யவும்.

 

மேலும், பொது மக்கள் ஏதேனும் தகவல் அறிந்தால், அவசர அழைப்புகளை மேற்கொள்ளும் வகையில், தொலைபேசி எண்ணை வழங்கியுள்ளோம் அறிவிப்பதற்காக.

 

எனவே, இந்தச் சூழலை தேவையற்ற அச்சுறுத்தல்களுக்கும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் பயன்படுத்த முயற்சிக்காதீர்கள்.

 

பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், சாத்தியமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்" என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05