வடக்கு
பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம்!

Oct 25, 2024 - 03:06 PM -

0

பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம்!

பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்தே தன்னை பொலிஸார் கைது செய்ததாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கப்பட்ட பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

நெல்லியடியில் இருந்த கடையொன்றில் சென்ற போது அந்த கடையின் உரிமையாளர் அந்த நேரம் உரிமையாளர் கடையில் இல்லாத போது நான் வீதியில் நின்ற போது பொலிஸார் என்னிடம் வந்து நான் சட்டவிரோதமாக துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக தெரிவித்தனர்.

நான் வீதியில் நின்ற போது என்னிடம் எந்தவிதமான துண்டு பிரசுரங்களும் இருக்கவில்லை. என்னிடம் இப்படியாக பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என்று சொல்லியும் அவர் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

பின் என்னை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து என்னிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்று இறுதியில் பொலிஸ் பிணையில் என்னை விடுதலை செய்தனர் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05