Oct 25, 2024 - 04:45 PM -
0
ரயில்வே ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச ரயில் அனுமதி சீட்டு ஒன்றை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ரயில்வே ஊழியர்கள் தங்கள் வீடு மற்றும் பணியிடங்களுக்கு இடையே பயணம் செய்ய இலவச ரயில் அனுமதி சீட்டு ஒன்றை வழங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.