வடக்கு
தேர்தல் சுவரொட்டி ஒட்டியவர் மின்சாரம் தாக்கி பலி!

Oct 25, 2024 - 04:46 PM -

0

தேர்தல் சுவரொட்டி ஒட்டியவர் மின்சாரம் தாக்கி பலி!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துவிநாயகபுரம் பகுதியில்  கட்சி ஒன்றின் தேர்தல் பரப்புரைக்கான சுவரொட்டி ஒட்டும் போது நபரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று (24) இரவு பதிவாகியுள்ளது.

 

இரவு 11.00 மணியளவில் முத்துவிநாயகபுரம் முத்துஐயன்கட்டு பகுதியில் கட்சி ஒன்றிற்கான தேர்தல் சுவரொட்டி ஒட்ட முற்பட்டவர் யானைக்காக காணி வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பினால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

 

தகரம் அடித்த குறித்த காணி வேலிக்கு முன்னால் காணி உரிமையாளரால் யானையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மின்சார இணைப்பு போடப்பட்டிருந்தது இது தெரியாமல் அவரது வேலி தகரத்தில் சுவரொட்டி ஒட்ட முற்பபட்ட போது மின்சாரத்தில் சிக்குண்ட குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

 

முத்துவிநாயகபுரம் - முத்துஐயன்கட்டு, ஒட்டுசுட்டானை சேர்ந்த 45 வயதுடைய காசிலிங்கம் லங்காதீபன் என்பவே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

 

இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒட்டுசுடுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

 

குறித்த காணியின் உரிமையாளர் அனுமதிபெற்று யானைவேலி அமைத்தாரா என்பது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05