Oct 25, 2024 - 05:16 PM -
0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுகள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் குழுவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அரிசி விலை மற்றும் அது தொடர்பான தற்போதைய நிலவரங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.