செய்திகள்
இந்திய அணியை வீழ்த்தி ஆப்கான் இறுதிப் போட்டிக்கு தகுதி!

Oct 25, 2024 - 10:54 PM -

0

இந்திய அணியை வீழ்த்தி ஆப்கான் இறுதிப் போட்டிக்கு தகுதி!

2024 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய ஏ அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஏ அணி தகுதி பெற்றுள்ளது.

 

இரண்டாவது அரையிறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

 

ஆப்கானிஸ்தான் ஏ அணி சார்பில் ஜுபைத் அக்பரி அதிகபட்சமாக 83 ஓட்டங்களையும், செதிகுல்லா ஹடல் 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

 

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

 

இந்திய அணி சார்பில் ரமன்தீப் சிங் 64 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

 

அதன்படி, 20 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று ஆப்கானிஸ்தான் ஏ அணி 2024 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

 

எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணி மற்றும் இலங்கை ஏ அணிகள் மோதவுள்ளன.

Comments
0

MOST READ
01
02
03
04
05