உலகம்
அமெரிக்காவின் மிகவும் வயதான பெண் காலமானார்!

Oct 26, 2024 - 10:56 AM -

0

அமெரிக்காவின் மிகவும் வயதான பெண் காலமானார்!

 அமெரிக்காவில் வாழும் மிகவும் வயதான நபரும், உலகின் மூன்றாவது வயதான நபருமான எலிசபெத் பிரான்சிஸ் தனது 115 வயதில் உயிரிழந்துள்ளார். அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை டெக்சாஸின் ஹூஸ்டனில் கழித்துள்ளார்.

 

1909-ம் ஆண்டு ஜூலை 25- ஆம் திகதி லூசியானாவில் எலிசபெத் பிரான்சிஸ் பிறந்தார். முதலாம் உலகப் போரிலிருந்து டைட்டானிக் கப்பல் மூழ்கும் வரை அனைத்தையும் அவர் நன்கு அறிந்திருந்தார். ஹூஸ்டனில் ஒரு தேநீர் கடையை நடத்தி வந்தார்.

 

இவர் வாகனம் ஓட்டுவதை விட நடைபயிற்சி செய்வதை விரும்பினார். இதுவரை அவர் அமெரிக்காவில் 20 ஜனாதிபதிகளின் ஆட்சியை கண்டுள்ளார்.

 

இந்த ஆண்டின் முற்பகுதியில் தனது 115-வது பிறந்தநாளில் நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பது குறித்த குறிப்பை பிரான்சிஸ் வழங்கி உள்ளார்.

 

முந்தைய நீண்ட ஆயுட்கால சாதனையாளரான எடி செக்கரெல்லி கலிபோர்னியாவில் தனது 116-வது பிறந்தநாளுக்கு சில வாரங்களுக்குப் பிறகு இறந்ததை அடுத்து, எலிசபெத் பிரான்சிஸ் இந்த ஆண்டு பிப்ரவரியில் நாட்டின் வயதான நபராக முடிசூட்டப்பட்டார். ஏப்ரல் மாதம், LongeviQuest-ல் இருந்து அமெரிக்காவில் மிகவும் வயதான நபராக அங்கீகரிக்கும் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

 

இப்போது, அமெரிக்காவின் மிக வயதான நபர் நவோமி வைட்ஹெட் ஆவார். அவர் செப்டம்பர் 26, 1910-ல் பிறந்தார் என்று LongeviQuest தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05