மலையகம்
மக்களின் கைகளிலே பணம் இல்லை!

Oct 26, 2024 - 11:31 AM -

0

மக்களின் கைகளிலே பணம் இல்லை!

ஆகவே இன்று மக்கள் இந்த தீபாவளியை பொறுத்த வகையிலே, தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதா அல்லது தீபாவளியையொட்டி திண்டாடுவதா என்ற நிலைக்கு மக்கள் வந்து தள்ளப்பட்டு இருக்கின்றார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

 

கண்டியில் அவருடைய அலுவலகத்தில் நேற்று (25) நடைப்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

 

இன்னும் சில நாட்களில் உலகம் எங்கும் வாழ கூடிய தமிழ் மக்கள் தீபாவளி திருநாளை கொண்டாட இருக்கின்றார்கள். இந்நாட்டிலே புதிய அரசாங்கம் தோன்றி இருக்கின்றது. புதிய ஜனாதிபதி ஆக அநுர குமார திசாநாயக்க பதவி ஏற்று இருக்கின்றார்.

 

npp அரசாங்கம் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. அவர்கள் எங்களை பார்த்து சொன்னார்கள். வளமான நாடு அழகிய வாழ்க்கை என்று சொன்னார்கள். 

 

ஆனால் தீபாவளி திருநாளுக்கு  இன்னும் ஒரு சில நாட்களே இருக்கின்ற போது அந்த திருநாளை கொண்டாட மக்கள் தயாராகுவதாக எங்களுக்கு தெரியவில்லை.

 

மக்களின் கைகளிலே பணம் இல்லை, விலைவாசிகள் அதிகரித்து கொண்டு செல்கின்றன. கட்டுப்பாடு அற்ற செல்கின்ற நிலைமை தோன்றி இருக்கின்றது. என்பது இன்று எல்லோருக்கும் புரிந்து இருக்க கூடியதாக ஒன்றாக காணப்படுகின்றது.

 

ஆகவே இன்று மக்கள் இந்த தீபாவளியை பொறுத்த வகையிலே, தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதா அல்லது தீபாவளியையொட்டி திண்டாடுவதா என்ற நிலைக்கு மக்கள் வந்து தள்ளப்பட்டு இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.  

--

Comments
0

MOST READ
01
02
03
04
05