Oct 26, 2024 - 01:56 PM -
0
தற்போதைய அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டத்தில் எந்த மூலோபாயமும் இல்லை என சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் நேற்று (25) பிற்பகல் கணேமுல்ல நகரில் நடைபெற்ற வர்த்தகர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"நான் தற்போதைய ஜனாதிபதியிடம் அன்றும் சுட்டிக்காட்டினேன். அவர் முன்வைக்கும் எந்த திட்டத்திலும் எவ்வித மூலோபாயமும் இல்லை. இலங்கையில் மிகக் குறுகிய காலத்தில் அதிக கடன் வாங்கியவராக தற்போது அவர் சரித்திரத்தில் இடம்பிடிக்கிறார்... எதிர்க்கட்சியை எங்களிடம் கொடுங்கள் என்று மக்களிடம் கேட்கிறோம்...