Oct 26, 2024 - 03:29 PM -
0
தேசிய அபிவிருத்தி வங்கியானது (NDB) ஐக்கிய இராச்சியத்தில் உலகளாவிய வங்கியியல் மற்றும் நிதி விருதுகள் [Global Banking and Finance Awards] 2024 இல், புத்தாக்கத்திற்கான கௌரவமிக்க சிறந்த புத்தாக்கம் - கொடுப்பனவு விருதை தனது புரட்சிகரமான NDB WriztPay திட்டத்திற்காக வென்றுள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த சர்வதேச அங்கீகாரம், நிதிச் சேவைத் துறையில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதில் NDB இன் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுவதுடன், மேலும் வங்கித் தொழில்நுட்பத்தில் அதன் பங்கை மேலும் உறுதிப்படுத்துகிறது.
உலகளாவிய வங்கியியல் மற்றும் நிதி விருதுகளானது, 2011 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, உலகளாவிய நிதிச் சமூகத்தின் புதுமை, சாதனை மற்றும் சிறப்பைக் கொண்டாடுகின்றது. பல்வேறு நிதித் துறைகளில் நிபுணத்துவம் மற்றும் முன்னோக்கு சிந்தனை உத்திகளை வெளிப்படுத்தும் அனைத்து அளவிலான நிறுவனங்களையும் இவ்விருதுகள் அங்கீகரிக்கின்றன. புத்தாக்கத்தில் சிறந்து விளங்கும் பிரிவில் NDB இன் வெற்றியானது, நவீன வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப அதிநவீன தீர்வுகளை வழங்குவதில் வங்கியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.
NDB WriztPay என்பது, வாடிக்கையாளர்களுக்கு விரைவாக தங்கள் நிதிகளை முகாமைத்துவம் செய்வதற்கான தடையற்ற மற்றும் பாதுகாப்பான வழியை வழங்கும் இலங்கையின் முதலாவது மணிக்கட்டில் அணியக்கூடிய கொடுப்பனவு தீர்வாகும். VISA மூலம் இயக்கப்படும், NDB WriztPay, வாடிக்கையாளர்களின் அன்றாடப் பரிவர்த்தனைத் தொடர்பினை புரட்சிகரமாக மாற்றியுள்ளது. இந்த கண்டுபிடிப்பானது இது வங்கியின் ஒவ்வொரு அம்சத்திலும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, வசதி, பாதுகாப்பு மற்றும் அணுகலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொள்ளும் NDB இன் டிஜிட்டல்- உத்தியை எடுத்துக்காட்டுகின்றது.
விருது குறித்து பேசிய NDB வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெலும் எதிரிசிங்க, பணம் செலுத்துவதற்கான எங்களின் புதுமையான அணுகுமுறைக்காக உலகளாவிய அரங்கில் அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் பெருமையடைகிறோம். NDB WriztPay எங்கள் வாடிக்கையாளர்களுக்கான வங்கி அனுபவத்தை மாற்றியமைக்கும் எங்கள் பார்வையை பிரதிபலிப்பதுடன் , அவர்களுக்கு தீர்வுகளையும் வழங்குகிறது. இந்த விருது வசதியாக மட்டுமல்ல, தொழில்நுட்ப ரீதியாகவும் மேம்பட்டதாக திகழ்வதுடன் புதுமைக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகவும் விளங்குகின்றது. மேலும் நிதித் துறையின் எல்லைகளைத் தொடர நாங்கள் உற்சாகமாக பணியாற்ற காத்திருக்கிறோம். வங்கியியல், தொழில்நுட்பம், பெருநிறுவன ஆளுகை, சொத்து முகாமைத்துவம் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உலகளாவிய வங்கியியல் மற்றும் நிதி விருதுகள் வழங்கப்படுகின்றன . NDB இன் வெற்றியானது, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் மற்றும் வங்கித் துறையில் புதிய தரநிலைகளை அமைக்கும் நிதியியல் தயாரிப்புகளை வழங்குவதில் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முன்னணியில் இருப்பதற்கான அதன் செயற்றிறனை எடுத்துக்காட்டுகிறது.
NDB தனது டிஜிட்டல் தடயத்தை தொடர்ந்தும் மேம்படுத்தி வருவதால், NDB WriztPay இன் வெற்றியானது, வாடிக்கையாளர்களை சிறந்த டிஜிட்டல் வங்கி அம்சங்கள் மூலம் வலுப்படுத்துவதை உறுதி செய்து, வங்கியின் புதிய கண்டுபிடிப்புகளை நடைமுறைத்தன்மையுடன் கலப்பதில் உள்ள கவனத்தின் பிரதிபலிப்பாகின்றது. NDB வங்கியானது எதிர்காலத்துடன் ஒத்துப்போகும் முன்னோடி தீர்வுகளை வழங்க உறுதிபூண்டுள்ளதுடன் தடையற்ற, பாதுகாப்பான மற்றும் புதுமையான வங்கி அனுபவங்களை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முன்னோக்கிச் சிந்திக்கும் நிதியியல் நிறுவனமாக அதன் நற்பெயரை வலுப்படுத்துகிறது.
NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.