Oct 26, 2024 - 03:35 PM -
0
இலங்கையின் முன்னணி ஆண்கள் ஆடை வர்த்தக நாமமான ஹமீடியா (Hameedia) அதன் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் பகுதியாக தனது பிரத்தியேக உலகளாவிய திருமணத் தொகுப்பை (Global Wedding Collection) கொழும்பில் உள்ள என்வோய் மேன்ஷனில் (Envoy Mansion) நடைபெற்ற நிகழ்வில் வெளியிட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரபலங்கள், பேஷன் செல்வாக்காளர்கள் மற்றும் திருமணத் துறையைச் சேர்ந்த முக்கிய நபர்கள் ஆகியோர் கலந்து கொண்டு திருமணத் தொகுப்பின் வெளியீட்டை சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை ஆதரிக்கும் நோக்கத்தில் ஹமீடியா தனது ‘பிங்க் கலெக்ஷன்’ (Pink Collection) மூலம் கிடைத்த வருவாயில் இருந்து, ரூ. 1 மில்லியன் நன்கொடையாக இந்திரா புற்றுநோய் அறக்கட்டளைக்கு (Indira Cancer Trust) அறிவித்தது. மேலும், ஹமீடியாவின் லைஃப்ப்வொர்த்(Lifeworth) முயற்சியின் கீழ் கடல் காவல்துறை மற்றும் கொழும்பு ரோட்டரி கிளப்புடன் இணைந்து 100 உயிர்காக்கும் அங்கிகளை விநியோகித்ததுடன் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக வெள்ளவத்தை கடற்கரையில் உயிர்காக்கும் பணியாளர்களுடன் இணைந்து ஒரு உயிர்காக்கும் தூண் ஒன்றையும் அமைத்தது.
ஹமீடியாவின் உலகளாவிய திருமணத் தொகுப்பானது கடற்கரைத் திருமணம், பூந்தோட்ட விழா, வெளியிட நிகழ்வு அல்லது இந்து மற்றும் கத்தோலிக்க பாரம்பரிய மற்றும் மத திருமணங்கள் போன்ற நிகழ்வுகளாக இருந்தாலும் ஒவ்வொரு திருமண வகைக்கும் மற்றும் மணமகனின் தனித்தன்மைக்கு ஏற்றவாறு பலவிதமான ஆடைகளை வழங்குகிறது. இந்த தொகுப்பில் ஒவ்வொரு மணமகனும் தனது சிறப்பு நாளில் பளபளக்கும் வகையில் ஆடம்பரமான மேற்கத்திய உடைகள், நவீன தேசிய அணிகலன்கள், இந்திய பாரம்பரிய உடைகள், ஜோத்பூர் உடைகள், ஷெர்வானி மற்றும் பல உள்ளன. புகழ்பெற்ற வர்த்தக நாமங்களான Albini, Thomas Mason, Loro Piana, DORMEUIL, Ermenegildo Zegna, VBC மற்றும் Tessitura Monti உள்ளடங்கிய இத்தாலி, ஐரோப்பா மற்றும் ஆசியாவிலிருந்து பெறப்பட்ட 300 க்கும் மேற்பட்ட துணிகள் மூலம் ஹமீடியா சிறந்த தரமான பொருட்களை வழங்குவதற்கான தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
ஹமீடியாவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஃபௌசுல் ஹமீட் பார்வையாளர்களுக்கு உரையாற்றியபோது, நிறுவனத்தின் பயணம் குறித்து உணர்ச்சிபூர்வமாக பேசினார். இன்றிரவு, ஆண்களுக்கான ஃபேஷனில் ஹமீடியா 75 ஆண்டுகள் அர்ப்பணித்ததை மட்டுமின்றி, கவனத்தை ஈர்க்கும் மணமகனின் முக்கியத்துவத்தையும் நாம் மதிக்கிறோம். நாம் ஒரு மைல்கல்லை மட்டும் அடையவில்லை, வாழ்க்கையும் ஆடம்பரமும் இணைந்த மகத்துவத்தை கொண்டாடுகிறோம். ஹமீடியாவின் 75 ஆண்டுகாலப் பயணமானது எங்களின் செழிப்பான பாரம்பரியத்திற்கும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுடன் இணைந்து நாங்கள் உருவாக்கிய நேசத்துக்குரிய நினைவுகளுக்குச் சான்றாக நிற்கிறது. இந்த உலகளாவிய திருமணத் தொகுப்பு மணமகன்களுக்கு அவர்களின் தனித்தன்மையை பிரதிபலிக்கும் ஆடைகளை வழங்கவும், ஒவ்வொரு திருமண வகைகளை நிறைவு செய்யவும், அவர்கள் தங்கள் சிறப்பு நாளில் நம்பிக்கையுடனும் ஆடம்பரமாகவும் தோற்றமளிக்கக் கூடிய ஆடைகளை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திருமணத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் ஃபௌசுல் ஹமீட் தலைமையில் பிரத்தியேமாக மணமகன்களுக்கான தேவைகளுக்கு ஏற்ப வல்லுனர்களின் ஆடம்பர ஆலோசனைகளை கிடைக்கிறது என்பதை ஹமீடியா குறிப்பிட்டிருந்தது. மணமகன்கள் தனிப்பட்ட ஆடம்பர ஆலோசனைகளைப் பெற விஐபி வல்லுனர்களின் ஆலோசனை சந்திப்பு அடிப்படையில் திட்டமிடலாம். தயார்நிலையில் உள்ள, தனிப்பயனுள்ள அல்லது தையலாளர் மூலம் உருவாக்கப்பட்ட தேர்வுகளை தேர்ந்தெடுத்தாலும் ஒவ்வொரு மணமகனின் தனித்துவமான தேவைகளை பூர்த்தி செய்வதை ஹமீடியா உறுதி செய்கிறது.