Oct 26, 2024 - 03:51 PM -
0
இலங்கை என்டோகிரினோலொஜிஸ்ட்ஸ் நிறுவகம் (SLCE) மற்றும் மொரிசன் லிமிடெட் இணைந்து, “நீரிழிவு பராமரிப்பு தொடர்பான சான்றிதழ் பயிற்சி நெறி” இரண்டாம் தொகுதியை 2024 ஒக்டோபர் 13ஆம் திகதி ஆரம்பித்திருந்தது. 65 க்கும் அதிகமான பொது வைத்திய செயற்பாட்டாளர்களின் பங்கேற்புடன் முதல் தொகுதி வெற்றிகரமாக பூர்த்தியடைந்திருந்ததைத் தொடர்ந்து, இந்த இரண்டாம் தொகுதியை 60 க்கும் மேற்பட்ட பொது வைத்திய அதிகாரிகளின் பங்கேற்புடன் ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் ஆரம்ப சுகாதாரபராமரிப்பு நிபுணர்களுக்கு நீரிழிவு முகாமைத்துவம் தொடர்பில் அவசியமான சாதனங்கள் மற்றும் அறிவை பெற்றுக் கொடுத்து, அவர்களுக்கு வலுவூட்டும் வகையில் முன்னெடுக்கப்படும் முதலாவது செயற்திட்டமாக இது அமைந்துள்ளது. SLCE மற்றும் மொரிசன் இணைந்து முன்னெடுக்கும் இந்த சான்றிதழ் பயிற்சிநெறி, 2024 பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. நீரிழிவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாட்டில் காணப்படும் நீரிழிவு பராமரிப்பு வைத்திய நிபுணர்களின் கொள்ளளவுக்கு அப்பால் சென்றமையினால், நீரிழிவு பராமரிப்பு தொடர்பில் நிபுணத்துவத்தை பரந்தளவில் தோற்றுவிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த செயற்பாட்டின் வெற்றிகரத் தன்மையை உறுதி செய்யும் வகையில் இரண்டாம் தொகுதி அறிமுகம் அமைந்திருப்பதுடன், நீரிழிவு கட்டுப்படுத்தல் தொடர்பில் முக்கியத்துவமளித்து செயலாற்றும் அதிகாரஅமைப்பான SLCE இன் அர்ப்பணிப்பை உறுதி செய்து, 60 வருடங்களுக்கு மேலான தொழிற்துறை பிரசன்னத்தைக் கொண்ட இலங்கையின் மருந்தாக்கல் உற்பத்தியாளரான மொரிசனுடன் இணைந்து, இலங்கையில் நீரிழிவு பராமரிப்பை மேம்படுத்த முன்வந்துள்ளது. அதிகரித்துச் செல்லும் நீரிழிவு தொடர்பான பிரச்சனைகளுக்கு எதிராக தேசம் போராடும் நிலையில், இந்த நீண்ட கால, தங்கியிருக்கக்கூடிய பயிற்சித் திட்டத்தினூடாக, நோயாளர் பராமரிப்பு மற்றும் சுகாதார கட்டமைப்பில் ஏற்படுத்தப்படும் சுமையை பெருமளவில் குறைத்தல் போன்றவற்றில் பெரிதும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.