Oct 26, 2024 - 05:26 PM -
0
நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வரலாற்று தோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி 3ஆவது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இதில் 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 259 ஓட்டங்களையும், இந்திய அணி அதன் முதலாவது இன்னிங்ஸில் 156 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.
அதற்கமைய, இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய நியூசிலாந்து அணி 255 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
அதற்கமைய, இந்திய அணிக்கு 359 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றி இலக்கை நோக்கி ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி, இன்றைய மூன்றாவது நாளில் 245 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 113 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
இந்த தோல்வியின் மூலம் 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வந்த இந்திய அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இறுதியாக 2012இல் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா இழந்திருந்தது.