Oct 26, 2024 - 05:41 PM -
0
பொதுத் தேர்தலில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த காந்தி கொடிகார தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உபாலி கொடிகாரவின் மனைவி காந்தி கொடிகார நேற்று (25) பிற்பகல் பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து தாக்கப்பட்டதாக தெரியவருகிறது.
கணவரின் தேர்தல் பிரசாரங்களில் கலந்துகொண்டு, வீடு வீடாகச் சென்று கொண்டிருந்த போது அவர் இவ்வாறு தாக்கப்பட்டார்.
தாக்குதலின் பின்னர் காந்தி கொடிகார ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தாக்கிய நபரை மஹரகம பொலிஸார் கைது செய்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரியவருகிறது.