செய்திகள்
நீரில் மூழ்கி இளைஞன் பலி

Oct 26, 2024 - 05:59 PM -

0

நீரில் மூழ்கி இளைஞன் பலி

அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 

ஹப்புத்தளை - தங்கமலை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த இளைஞன் அத்தனகல்ல தம்புட்டுவ பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையில், தொழில் நிமித்தமாக ஒரு மாதத்திற்கு முன்னரே குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளார்.


நண்பர்கள் சிலருடன் அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையிலேயே இவ்வாறு இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.


பின்னர், பிரதேச மக்கள் இணைந்து நான்கு மணிநேர தேடுதலுக்கு பின்னரே இளைஞனின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05