Header Logo

செய்திகள்
காலாவதியான உணவுகள் - சீன உணவுக் கடைக்கு சீல்

Oct 26, 2024 - 08:26 PM -

0

காலாவதியான உணவுகள் - சீன உணவுக் கடைக்கு சீல்

சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உணவு, மருந்துகள் மற்றும் விட்டமின்கள் என்பன காலாவதியான பின்னர் மீண்டும் திகதி இடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மோசடியை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இன்று  (26) உகுஸ்ஸா இது தொடர்பில் வௌிப்படுத்தியது.

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல சீன உணவு விற்பனை நிலையம் சீன உணவுகள், மருந்துகள் மற்றும் விட்டமின்களை விற்பனை செய்கிறது.

சீன உணவுகளை விரும்பும் இலங்கையர்களும் சீனர்களும் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர்.

இத்தகைய பின்னணியில் காலாவதியான பொருட்களின் லேபிள்களை மாற்றி மீண்டும் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளின் சோதனைகளுடன் "அத தெரண உகுஸ்ஸா" அந்த இடத்திற்குச் சென்றது.

அங்கு நடத்தப்பட்ட தேடுதலின் போது இது தொடர்பான தகவல்களை உறுதி செய்ய முடிந்தது.

அதன்படி, சம்பந்தப்பட்ட இடத்தில் ஒரு தொகை காலாவதியான உணவுப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்குள்ள சில பொருட்களுக்கு காலாவதி திகதிகள் கூட பொறிக்கப்படவில்லை என்பது விசேட அம்சமாகும்.

மேலும் அந்த கடையில் காலாவதியான மருந்துகள் மற்றும் விட்டமின்கள் பதுக்கி வைத்திருப்பதையும் அவதானிக்க முடிந்தது.

பின்னர், மூன்று மாடிகளைக் கொண்ட குறித்த கடைக்கு, நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

எதிர்காலத்திலும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை அம்பலப்படுத்த "அத தெரண உகுஸ்ஸா" தயாராகவுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title