வடக்கு
மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Oct 26, 2024 - 09:07 PM -

0

மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தின் - ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 23 ஆம் திகதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற இரண்டு விசைப்படகு 16 மீனவர்களை இலங்கைக்கு கடற்கரை சிறைபிடிக்கப்பட்டு தற்போது இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ளனர். 

இவர்களை விடுவிக்க கூறியும் மேலும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசு அரசுடைமையாக்கிய விசைப்படகுகளுக்கு மத்திய மாநில அரசு இருப்பிட வழங்கிட கோரியும் மேலும் ராமேஸ்வரத்தில் விசைப்படகு 14 சங்கங்கள் உள்ளன. 

இலங்கை கடற்படையை கண்டித்து மற்றும் சிறைபிடிக்கப்பட்ட படகுகளுக்கு இழப்பீடு வழங்காத இந்திய மத்திய மாநில அரசை கண்டித்தும் இன்று (26) ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு விசைப்படகு சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமையில் மீனவர்கள் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05