Header Logo
Mogo Academy

கிழக்கு
அம்பாறை மாவட்டத்தில் கடும் பாதுகாப்பு!

Oct 26, 2024 - 09:36 PM -

0

அம்பாறை மாவட்டத்தில் கடும் பாதுகாப்பு!
Mobitel inner

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் அதாவுல்லாஹ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின்  வருகையை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று (25) மாலை முதல் இன்று (26) வரை அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, சவளக்கடை, நாவிதன்வெளி, சொறிக்கல்முனை ,வீரமுனை, சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், அட்டப்பளம், பாலமுனை, ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ,தம்பிலுவில், தம்பட்டை, திருக்கோவில், பொத்துவில், உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதே வேளை அம்பாறை, பொத்துவில், அறுகம்பை பகுதி சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் இங்கு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. இதன் காரணமாக கடும் பாதுகாப்பு கெடுபிடிக்கு மத்தியில் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் முக்கிய வீதிகள், இதர வர்த்தக நிலையங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அம்பாறையில் தற்போது பொதுத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சுயேட்சைக் குழக்கள் தங்களது தேர்தல் பிரசாரங்களை மும்முரமாக செய்து வருகின்றன.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara