Oct 26, 2024 - 10:12 PM -
0
நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீடத்தில் இன்று (26) காலை 7.00 மணி முதல் காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு மஹரிஷிகளின் 91 வது ஜனன தின குரு ஜயந்தி விழா பக்திபூர்வமாகவும் வெகு விமர்சையாகவும் நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயம் காயத்ரி பீட வளாகத்தில் பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தில் விஷேட அபிஷேக அலங்கார பூஜைகளை தொடர்ந்து குருபீடத்திற்கு குரு திருவுருவச் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் குரு பூஜை, காயத்ரீ பூஜை பிரார்த்தனை தியானம் என்பனவும் இடம்பெற்றது.
--