விளையாட்டு
3ஆவது ஒருநாள் போட்டியின் வெற்றி மே.இ.தீவுகள் அணிக்கு!

Oct 26, 2024 - 11:55 PM -

0

3ஆவது ஒருநாள் போட்டியின் வெற்றி மே.இ.தீவுகள் அணிக்கு!

இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

 

கண்டி - பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இன்றை போட்டியானது மழை காரணமாக நீண்ட நேர தாமதத்திற்கு பின்னரே இடம்பெற்றது.

 

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 23 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

 

டக்வத் லூயிஸ் முறையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 196 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

 

அதன்படி, 22 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

 

இந்த வெற்றியின் ஊடாக 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Comments
0

MOST READ