செய்திகள்
இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

Oct 27, 2024 - 10:44 AM -

0

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.


நுரைச்சோலை - கரம்ப பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மாம்புரி பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இதேவேளை, அனுராதபுரத்தில் 25 ஏக்கர் சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி சுவரில் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.


திசாவெவ, சங்கமித்த மாவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05