Oct 27, 2024 - 11:46 AM -
0
எதிர்வருகின்ற பொதுத் தேர்தலிலே நாங்கள் அமோக வெற்றியை பெறுவோம் என கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
கம்பளையில் மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெருந்தோட்ட மக்கள் வாழ்கின்ற பல மாவட்டங்கள் இருக்கின்றது. இதில் நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் எங்கள் மக்கள் செறிந்து வாழ்கின்றார்கள். அங்கே எப்பொழுதும் எங்களுடைய அரசியல் பிரதிநிதித்துவம் ஆனது தொடர்ச்சியாக இருந்து இருக்கின்றது.
ஆனால் ஏனைய மாவட்டங்கள் அரசியல் ரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்ட அல்லது பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள கடினமான மாவட்டங்களாக இருந்து இருக்கின்றது.
அதனால் அங்கே இருக்கக் கூடிய பெருந்தோட்ட மக்கள் ஓரம் கட்டப்பட்டவர்களாக தேசிய அபிவிருத்தி திட்டங்களில் உள்வாங்கப்படாதவர்களாக இருந்து இருக்கின்றார்கள்.
அத்தகைய ஒரு மாவட்டமாக தான் கடந்த காலத்தில் கண்டி மாவட்டம் காணப்பட்டது. கண்டி மாவட்டத்திலே தமிழ் பிரதேசங்களினுடைய அபிவிருத்திகள் ஓரம் கட்டப்பட்டவையாக இருந்தது.
அந்த அபிவிருத்திகளை நாங்கள் கொண்டு வர முடியாதவையாக இருந்தது. எங்களது பிரச்சினைகளை வெளியிலே சொல்வதற்கு எங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கேட்பதற்கு, குரல் எழுப்புவதற்கு, ஒரு வாய்ப்பு இல்லாத நிலைமை இருந்தது.
அதன் மூலம் தேசிய அபிவிருத்தி திட்டத்தில் எங்களது மக்களையும் முன்வாங்க முடிந்தது. அத்தகைய அந்த பாரிய வாய்ப்பு எங்களுக்கு இந்த கண்டி தமிழ் பாராளுமன்ற உறுப்புரிமை மூலம் பெற்று கொண்டோம் என்பது சகலரும் அறிந்தது.
எதிர்வருகின்ற பொதுத் தேர்தலிலே நிச்சயமாக கண்டி மாவட்டத்தில் இருக்கக் கூடிய அனைத்து தமிழ் மக்களும் ஒன்றாக கைகோர்த்து கொண்டு சிலிண்டர் சின்னத்திற்கு வாக்கு அளிப்பதன் மூலமாக கண்டி தமிழ் பாராளுமன்ற உறுப்புரிமையை கட்டிக் காப்பார்கள் என்று நாங்கள் அமோக வெற்றியை பெறுவோம் என தெரிவித்தார்.
--