விளையாட்டு
கிண்ணம் யாருக்கு: இலங்கை A மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகள் இன்று மோதல்

Oct 27, 2024 - 11:51 AM -

0

கிண்ணம் யாருக்கு: இலங்கை A மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகள் இன்று மோதல்

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ணம் 2024 (எமர்ஜிங் ஆசிய கிண்ணம்) டி-20 கிரிக்கெட் தொடர் ஓமானில் நடைபெற்று வருகிறது.


இந்த தொடரில் கலந்து கொண்ட 8 அணிகளில் இருந்து குரூப் A-வில் இருந்து இலங்கை A, ஆப்கானிஸ்தான் A அணிகளும், குரூப் B-யில் இருந்து இந்தியா A, பாகிஸ்தான் A அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.


பங்களாதேஷ் A, ஹொங்கொங், UAE, ஓமான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்நிலையில், இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் A அணியை வீழ்த்தி இலங்கை A அணியும், இந்தியா A அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் A அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.


இந்நிலையில், இலங்கை A - ஆப்கானிஸ்தான் A அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று அல் அமேரத்தில் நடைபெறுகிறது. இலங்கை நேரப்படி போட்டியானது இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05