Oct 27, 2024 - 03:07 PM -
0
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (27) நாடுபூராகவும் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் ஒரு தொகுதியாக அடங்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு தேருநர் இடாப்பின் பிரகாரம் 100,907 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான வாக்காளர் அட்டைகளை தபால் உத்தியோகத்தர்கள் இன்று காலை முதல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநியோகித்து வருவதை காணமுடிகிறது.
--