உலகம்
உலகின் மிகப்பெரிய பிரமாண்ட கட்டிடம்!

Oct 27, 2024 - 06:10 PM -

0

உலகின் மிகப்பெரிய பிரமாண்ட கட்டிடம்!

சவுதி அரேபியாவில் உலகின் மிகப்பெரிய பிரமாண்டமான கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. 50 பில்லியன் டாலர் மதிப்பில் 'முகாப்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 

தலைநகர் ரியாத்தில் அமைய உள்ள 'முகாப்' உலகின் மிகப்பெரிய கட்டிடமாக மாற உள்ளது. 

 

முகாப் திட்டமானது 2.5 கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்கும் என்று அதன் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் 1,04,000 குடியிருப்புகள், 9,000 விடுதி அறைகள் அமைய உள்ளன.

 

இந்த திட்டத்தில் அருங்காட்சியகம், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம், தியேட்டர் மற்றும் 80-க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார மையங்கள் ஆகியவை இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

 

புதிய நகரின் கட்டுமான பணிகள் 2030-ம் ஆண்டிற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரமாண்ட நகர திட்டம் தொடர்பான காணொலியை சவுதி அரசு வெளியிட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05