Oct 27, 2024 - 07:34 PM -
0
ஆசிய வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகள் மோதவுள்ளன.
இந்த இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இந்தப் போட்டி ஓமனில் உள்ள அல் அமெரத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ணப் போட்டி 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் இம்முறை 6ஆவது தடவையாகவும் நடைபெறுகின்றது.
இலங்கை இதற்கு முன்னர் இரண்டு முறை (2017, 2018) இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது.
அதில் இரண்டிலும் இலங்கை அணி செம்பியன் பட்டம் வென்றது சிறப்பம்சமாகும்.
இருப்பினும், ஆப்கானிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவது இதுவே முறையாகும்.