Oct 28, 2024 - 10:26 AM -
0
பங்களாதேஷில் ஷேக் ஹசினா ஆட்சி காலத்தில் இராணுவ தளபதியாக இருந்த ஜியாவுல் ஹசன்,10 முன்னாள் அமைச்சர்கள், ஹசீனாவின் முன்னாள் ஆலோசகர்கள் 2 பேர் உட்பட 20 பேருக்கு டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மாணவர்கள் போராட்டத்தின் போது நடந்த மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் சம்மந்தமாக அடுத்த மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
அங்கு நடந்த கலவரத்தில் 753 பேர் பலியாகினர். 1,000 பேர் படுகாயமடைந்தனர். ஏற்கனவே, படுகொலைகள் தொடர்பாக ஹசீனா உட்பட 45 பேருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.