செய்திகள்
மின் கட்டண திருத்தம் - மேலதிக தகவல்களை கோரும் PUCSL

Oct 28, 2024 - 01:53 PM -

0

மின் கட்டண திருத்தம் - மேலதிக தகவல்களை கோரும் PUCSL

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மேலதிக தகவல்களை கோரி இலங்கை மின்சார சபைக்கு இன்று (28) அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டு மீளாய்வுக்காக, இலங்கை மின்சார சபையானது கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவை அண்மையில் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.

 

அதற்கமைய, முன்மொழியப்பட்ட மறு ஆய்வுகள் குறித்து விவாதிக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று சந்திக்க உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.

 

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு இது தொடர்பில் மேலதிக திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகள் தேவைப்பட்டால், மின்சார சபைக்கு கடிதம் மூலம் அறிவிக்க முடியும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05