செய்திகள்
கெளரவமான பொதுச் சேவைக்காக திலித் வழங்கிய உறுதிமொழி

Oct 28, 2024 - 02:01 PM -

0

கெளரவமான பொதுச் சேவைக்காக திலித் வழங்கிய உறுதிமொழி

கௌரவமான பொது சேவையை உருவாக்குவதற்கு தானும் தனது குழுவினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வஜன அதிகாரத்தில் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

 

துணிச்சலான எதிர்க்கட்சியை உருவாக்கி இதற்காக செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

"மக்களின் குறிப்பாக அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மரியாதைக்குரிய பொது சேவையை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும்? அரசு ஊழியர்களுக்கு அவர்களின் குழந்தைகளின் கல்வி, தங்குமிடம், அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் குறித்த எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு திட்டத்தை வழங்க நாங்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும். வெற்றியடைய வேண்டிய மக்களை வெற்றியடையச் செய்வதற்காக நாங்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும். எமது அனுபவங்களின் ஊடாக அதனைச் செய்ய எங்களால் முடியும். அனைவரினது உயர்வையும் காண விரும்புவதற்காக இந்த பாராளுமன்றத்தை நிரப்புவதற்கு துணிச்சலான எதிர்க்கட்சியாக எதிர்க்கட்சியில் அமரவுள்ளோம்" என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05