Oct 29, 2024 - 10:53 AM -
0
பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே தற்போதைய அரசாங்கம் கடன்களை பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத்தில் அந்த கட்டுப்பாடுகளை மீளாய்வு செய்ய எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றிரவு (28) தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.