Oct 29, 2024 - 12:03 PM -
0
எம்மீதான தாக்குதல் சம்பவங்கள் ஊடாக எமது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது கட்சியினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று பெண்கள் உள்ளிட்ட 08 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதில் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்
இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு அச்சுறுத்தலாகும்.
சமாதானமான அமைதியான தேர்தலுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாக பார்க்கின்றோம். மான் சின்னத்தில் போட்டியிடும் எங்களை முடக்குவதற்காக திட்டமிட்டே எம் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
வன்முறை கும்பல் ஒன்றினால் பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர். அதற்கு துரதிஷ்டவசமாக எந்த பெண்கள் அமைப்புக்களும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
அதேவேளை சட்டத்தையும் அமைதியையும் விரும்புகின்றவர்களும், எந்தவொரு அரசியல் கட்சிகளும் எம்மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கண்டனம் தெரிவிக்கவில்லை.
எம்மீதான தாக்குதல் சம்பவங்கள் ஊடாக எமது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.
--