செய்திகள்
அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படவில்லை

Oct 29, 2024 - 12:05 PM -

0

அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படவில்லை

இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்ட தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம் சில தகவல்களை இலங்கை புலனாய்வு நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

அதற்கமைவாக தேசிய பாதுகாப்புச் சபையை கூட்டி விரைவான தீர்மானங்களை எடுத்ததாக இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் தெரிவித்தார்.

 

சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

 

மேலும், அறுகம்பே பகுதிக்கு பயணம் செய்வது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ள போதும், பயணத் தடை விதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


 

Comments
0

MOST READ
01
02
03
04
05