வடக்கு
மன்னார் மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

Oct 29, 2024 - 01:03 PM -

0

மன்னார் மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் சமூக கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நேற்று (28) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

 

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கும் அது தொடர்பாக வேலை செய்கின்ற சிவில் சமூக அமைப்புகளுக்கும், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பை வலுப்படுத்தி அந்த வலுப்படுத்துதல் ஊடாகக் காணாமல் போனவர்களின் குடும்ப பிரதிநிதிகளுக்கு உதவி செய்யும் நோக்கிலேயே இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஆணையாளர் யோகராஜா, காணாமல் போன ஆட்கள் பற்றிய தலைமைக் காரியாலய அலுவலக உத்தியோகத்தர்கள், மன்னார் பிராந்திய அலுவலக உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக மன்னார் மாவட்டத்தில் சுமார் 300 பேர்கள் வரையிலான நபர்களுடைய படங்கள் மற்றும் காணாமல் போன விதம் தொடர்பில் ஆவணமாக தயாரிக்கப்பட்ட புத்தகமொன்று சர்வதேச நிறுவனம் உட்பட பலரிடம் கையளிக்கப்பட்டுள்ள குறித்தும் சுட்டிக் காட்டப்பட்டது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05