செய்திகள்
வாகன இறக்குமதி - பச்சை கொடி காட்டிய அரசாங்கம்!

Oct 29, 2024 - 02:52 PM -

0

வாகன இறக்குமதி - பச்சை கொடி காட்டிய அரசாங்கம்!

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

மத்திய வங்கியும் இது தொடர்பில் இணக்கம் தெரிவித்துள்ளதாக இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் தெரிவித்தார்.

 

அதற்கமைவாக எதிர்காலத்தில் முறையான முறைமை தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

 

“குறிப்பிட்ட சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகன இறக்குமதி செயல்முறையை அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மத்திய வங்கியும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் அதற்கான முறையான முறைமையை தயாரித்து, அந்த முறைமை என்னவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். பல்வேறு நபர்களை உள்ளடக்கி கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. அதையெல்லாம் கருத்தில் கொண்டு, நமது பணம் பாரியளவில் வௌியில் செல்லாமல் இருக்க இதை முறையாகச் செய்ய வேண்டும்."

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05