Oct 29, 2024 - 03:49 PM -
0
தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகின்ற தமிழரசுக் கட்சியை பலவீனமாக்கி மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கும் 4 ஆசனங்களை இல்லாமல் செய்து தமிழர்களுடைய குரலை நசுக்குவதற்காக ஒரு சதி திட்டம் தான்.
இந்த 27 சுயேட்சைக் குழுக்களும் 22 அரசியல் கட்சிகளும் களமிறக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் முறியடிக்க இந்த சுயேட்சை குழுக்கள் கட்சிகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என மட்டக்களப்பு முன்னாள் மாநகரசபை மேஜர் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருமான சரவணபவன் தெரிவித்தார்.
மட்டு. மண்முனை வடக்கு தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டு பிரிவினர் வேட்பாளரை அறிமுகம் செய்யும் நிகழ்வில் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2002 ஆண்டுக்கு பின்பு ஒரு தனி தூய்மையான தமிழரசு ஆக ஆலமரமாக நீண்ட தலைமைத்துவத்தை வகித்த சம்பந்தன் இல்லாது தனியாக சந்திக்கும் ஒரு தேர்தல். அந்த வகையில் பெரும்பான்மை சமூகம் இந்த தமிழர்களுக்காக குரல் கொடுக்கிற தமிழரசுக்கட்சி பலவீனமாக்கி குறைந்த அங்கத்தவர்களுடன் பாராளுமன்றத்திற்கு சென்று தமிழர்களின் குரலை ஒழிப்பதற்கான சந்தர்ப்பத்தை இந்த தமிழரசு இழக்க வேண்டும் என்ற தோரணையில் தான் நீண்ட நாட்களாக செயல்பட்டு கொண்டு வந்திருக்கின்றது.
அதில் 2009 இல் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து சைக்கிள் கட்சியை பிரித்து எடுத்து அதன் பேர் தமிழ் காங்கிரஸ் கட்சி அப்பெயரை தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்று பெயரில் மாற்றம் செய்து அதற்கு காற்றடித்து அதற்கு பல வகைகளிலும் நிதி திரட்டி தமிழரசுக்கு நிகரான ஒரு கட்சியாக தொடக்க முற்பட்டார்கள் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் அதற்கு சரியான பாடம் புகட்டி தமிழரசு தான் தமிழர்களின் காவலன் என்று நிரூபித்து விட்டார்கள்.
அதற்குப் பின்பு தமிழரசில் இருந்த விக்னேஸ்வரனை எடுத்து அவருக்கு மகுடம் சூட்டி அவருக்காக அவரை ஒரு தலைவர் ஆக்கி அவரை தமிழரசின் தலைவனுக்கு சமாந்தரமான தலைவராக கொண்டு வர முயற்சித்தார்கள்.
அதையும் தமிழ் மக்கள் ஏகோபித்த தலைவர், ஏகோபித்த கட்சியாக தமிழரசுக் கட்சி தான் என்பதை தமிழ் மக்கள் நிரூபிக்கின்றார்கள்.
அதேபோல தான் இந்த முறையும் தமிழரசை நாங்கள் தனியாக கொண்டு வந்து இருக்கின்றோம். தமிழரசை நாங்கள் தனியாக கொண்டு வந்து தமிழ் மக்களிடம் ஆணையை கேட்டு நிற்கின்றோம். தமிழரசு தான் தமிழர்களின் காவலன் என்பதைக் காட்ட வேண்டும்.
காட்டி மீண்டும் தமிழரசை ஏகோபித்த பிரதிநிதி என்பதை நாங்கள் நிரூபிக்க வேண்டும். அதற்கான தேர்தலாகத்தான் நாங்கள் இதை எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது.
எங்களுக்கு நான்கு ஆசனங்களும் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு ஆசனமும் கிடைப்பது தான் விகிதாசாரம். இந்நிலையில் எங்களுக்குள் உள்ள பிரிவால் எங்கள் தமிழ் மக்களுக்கு இடையில் உள்ள வாக்குகள் பிரிவதால் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களாக குறைந்து வருகின்றது இப்பிரிவுகளை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே 27 சுயேட்சைக் குழுக்கள் 22 அரசியல் கட்சிகள் இங்கே களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
--