செய்திகள்
அறுகம்பே விசாரணையின் அதி இரகசிய அறிக்கை சமர்ப்பிப்பு!

Oct 29, 2024 - 05:45 PM -

0

அறுகம்பே விசாரணையின் அதி இரகசிய அறிக்கை சமர்ப்பிப்பு!

அறுகம்பே சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான அதி இரகசிய அறிக்கையை விசாரணை அதிகாரிகள் இன்று (29) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் சமர்ப்பித்தனர்.

 

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

அறிக்கையை பரிசீலித்த நீதவான், விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

 

இந்நாட்டில் வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகள்  அதிகம் தங்கியிருக்கும் பிரதேசத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக பயங்கரவாத புலனாய்வு பணியகம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05