Oct 29, 2024 - 06:45 PM -
0
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடனான கலந்துரையாடல் தோல்வியடைந்தால் நாளை (30) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில் பொது முகாமையாளருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததாக அதன் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
நிர்வாக பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.