வணிகம்
2024 ARC விருதுகள் வழங்கலில் SLT-MOBITEL சர்வதேச மட்ட கௌரவிப்பைப் பெற்றுள்ளது

Oct 30, 2024 - 11:28 AM -

0

2024 ARC விருதுகள் வழங்கலில் SLT-MOBITEL சர்வதேச மட்ட கௌரவிப்பைப் பெற்றுள்ளது

பெருமைக்குரிய 38ஆவது வருடாந்த சர்வதேச ARC விருதுகள் வழங்கும் நிகழ்வில் தங்கம் மற்றும் சான்று விருதுகளை SLT-MOBITEL சுவீகரித்திருந்தது. உலகின் மாபெரும் வருடாந்த நிதி அறிக்கை போட்டியாக இது கருதப்படுவதுடன், வருடாந்த நிதி அறிக்கைகளில் சர்வதேச மட்டத்தில் சிறப்பை எய்தியுள்ளமையை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றது.

 

ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சியின் வருடாந்த நிதி அறிக்கை 2023, ‘We are an App of Life’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருந்ததுடன், தொலைத் தொடர்பாடல்கள் பிரிவில், தங்க விருதை பெற்றுக் கொண்டது. Specialized AR - Integrated AR & ESG பிரிவில் சிறப்பு சான்றையும் பெற்றுக் கொண்டது.

 

SLT-MOBITEL இன் உலகத் தரம் வாய்ந்த வருடாந்த நிதி அறிக்கை நியமங்களை கொண்டாடும் வகையில் இந்த சாதனை அமைந்திருப்பதுடன், இலங்கையின் தொலைத் தொடர்பாடல் துறையில் கொண்டுள்ள உயர்ந்த ஸ்தானத்தை மீள உறுதி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.


கூட்டாண்மை அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை, ஆக்கத்திறன் மற்றும் சிறப்பு ஆகியவற்றுக்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் இந்த சர்வதேச கௌரவிப்பு அமைந்துள்ளது. 'We are an App of Life' எனும் தலைப்பில் நிறுவனத்தினால் புத்தாக்கமான வழிமுறையினூடாக வெளியிடப்பட்டிருந்த வருடாந்த நிதி அறிக்கைக்கு, நடுவர்கள் மத்தியில் உறுதியான வரவேற்பு காணப்பட்டதுடன், தொலைத் தொடர்பாடல் துறையில் உயர் கௌரவத்தையும் பெற்றுக் கொண்டது.

 

மேலும், Specialized AR - Integrated AR & ESG பிரிவினூடாக சூழல், சமூகம் மற்றும் ஆளுகை செயற்பாடுகளில் SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

 

38ஆவது ARC விருதுகள், ‘Academy Awards of Annual Reports,’ எனவும் அறியப்படுவதுடன், வருடாந்த நிதி அறிக்கைகளில் உயர்ந்த நியமங்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. சிறந்த 30% புள்ளிகளை பெறும் விண்ணப்பங்கள் மாத்திரமே விருதுக்கு பொருத்தமானவையாக கவனத்தில் கொள்ளப்படுவதுடன், இதனூடாக SLT-MOBITEL இன் சாதனையின் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான போட்டியில் 32 நாடுகளைச் சேர்ந்த 1550 பதிவுகள் கிடைத்திருந்ததுடன், இதில் ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி உயர் கௌரவிப்புகளை பெற்றிருந்தது.

 

ARC விருதுகள் MerComm, Inc.இனால் வழங்கப்படுவதுடன், துறைசார் நிபுணத்துவ நடுவர் குழுவினால் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுகின்றனர். வெற்றியீட்டும் தெரிவுகளினூடாக பங்குதாரர்களுக்கு சிறந்த பெறுமதி, நிறுவனத்தின் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் தொடர்பாடல்படுத்தி காண்பிப்பது போன்றன வெளிப்படுத்தப்படுகின்றன.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05