வணிகம்
DFCC இந்திய வர்த்தக சம்மேளனத்தின் Emerging Asia Banking Awards 2024 நிகழ்வில், மூலோபாய மகத்துவம் மற்றும் வளர்ச்சிக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது

Oct 30, 2024 - 11:37 AM -

0

DFCC இந்திய வர்த்தக சம்மேளனத்தின் Emerging Asia Banking Awards 2024 நிகழ்வில், மூலோபாய மகத்துவம் மற்றும் வளர்ச்சிக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது

இந்தியாவின் புதுடெல்லி மாநகரில் இந்திய வர்த்தக சம்மேளனம் அண்மையில் ஏற்பாடு செய்த, 2 வது ICC Emerging Asia Banking Conclave and Awards 2024 நிகழ்வில் இரு அங்கீகாரங்களைப் பெற்று DFCC வங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் வங்கித்துறையில் மகத்துவத்திற்கான அங்கீகாரத்திற்கு மிகவும் மதிப்புமிக்க நிகழ்வாக இது அமைந்துள்ளதுடன், “Best Performance of Growth” (மிகச் சிறந்த பெறுபேற்றுத்திறன் வளர்ச்சி) மற்றும் “Best Performance of Profitability” (மிகச் சிறந்த இலாபத்திறன்) ஆகிய விருதுகளைப் பெற்றுக்கொண்ட DFCC வங்கி, தொழிற்துறையில் தலைமைத்துவ ஸ்தானத்தை நோக்கிய தனது பயணத்தில் முக்கியமான சாதனை மைல்கல் ஒன்றை நிலைநாட்டியுள்ளது.


DFCC வங்கியின் வலுவான நிதியியல் மூலோபாயம், தொழிற்பாட்டு மகத்துவம் மற்றும் தன்னுடன் தொடர்புபட்ட தரப்பினருக்கு மகத்தான மதிப்பை வழங்குவதில் காண்பிக்கும் ஓயாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான பலனாக இந்த இரட்டை அங்கீகாரங்கள் அமைந்துள்ளன. மிகவும் போட்டிமிக்க மற்றும் சவாலான பொருளாதார சூழலில், கணிசமான வளர்ச்சி மற்றும் இலாபத்திறன் ஆகியவற்றை ஒரு நேரத்தில் அடையப்பெறுவது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதொரு முயற்சி. பாதகமான சூழலுக்கு மத்தியிலும்
தளைத்தோங்குவதில் வங்கியின் ஆற்றலை இவ்விருதுகள் வெளிக்காண்பிப்பதுடன், அதன் தலைமைத்துவ அணியின் நெகிழ்திறன் மற்றும் மூலோபாய சாமர்த்தியம் ஆகியவற்றையும் எடுத்துக்காட்டுகின்றது. DFCC வங்கியின் வெற்றியானது பெறுபேற்றுத்திறன் புள்ளி விபரங்களின் அடிப்படையில் கணிக்கப்படுவது மாத்திரமன்றி, தொழிற்துறையில் தர ஒப்பீட்டு நியமத்தை நிலைநாட்டி, அதன் வாக்குறுதிகளை தொடர்ச்சியாக நிறைவேற்றி வரும் ஆற்றலையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகின்றது என்பதை இது காண்பிக்கின்றது.


DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் இது குறித்து
கருத்து வெளியிடுகையில், “பெருமதிப்புமிக்க இவ்விருதுகளை பெற்றுள்ளமை எமக்கு மிகுந்த
கௌரவமளிப்பதுடன், நிலைபேறு கொண்ட வளர்ச்சி மற்றும் இலாபத்திறன் ஆகியவற்றில்
மூலோபாயரீதியான எமது கவனத்தை இது பிரதிபலிக்கின்றது. இந்த அங்கீகாரம் எமது
அணியின் கடின உழைப்பிற்கான பரிசாக அமைந்துள்ளதுடன், சவால்மிக்க சந்தை
நிலைமைகள் மத்தியில் எமது வெற்றியை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் அவர்கள் இன்னும்
சிறப்பாகச் செயற்படுவதற்கும் ஊக்குவிக்கின்றது. தலைசிறந்த மதிப்பு மற்றும் புத்தாக்கமான
தீர்வுகள் ஆகியவற்றை நாம் முன்னெடுக்கும் நிலையில், எமது வாடிக்கையாளர்கள் மற்றும்
தொடர்புபட்ட தரப்பினர் மீதான எமது அர்ப்பணிப்பையும் இது மீள உறுதிப்படுத்துகின்றது,”
என்று குறிப்பிட்டார்.


ICC Emerging Asia Banking Conclave and Awards நிகழ்வானது, ஆசிய பிராந்தியத்தில் வங்கி
மற்றும் நிதிச் சேவைகள் துறையில் மகத்துவத்திற்கு அங்கீகாரமளித்து, கௌரவப்படுத்தும்
நோக்குடன் இந்திய வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற மிகவும்
மதிப்பிற்குரிய ஒரு செயற்திட்டமாகும். மகத்தான பெறுபேற்றுத்திறன், புத்தாக்கம் மற்றும்
தலைமைத்துவத்துடன், வளர்ச்சி, இலாபத்திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவை
ஆகியவற்றில் புதிய தர ஒப்பீட்டு நியமங்களை நிலைநாட்டுகின்ற நிறுவனங்களை
இவ்விருதுகள் போற்றிக் கொண்டாடுகின்றன. தொழிற்துறை தலைவர்கள் தமது
சாதனைகளை வெளிக்காண்பிப்பதற்கான தளத்தை இந்நிகழ்ச்சித்திட்டம் வழங்குவதுடன்,
வங்கித்துறை சமூகத்தின் மத்தியில் தொடர்ச்சியான மேம்பாடு மற்றும் மகத்துவத்திற்கான
உணர்வையும் வளர்க்கின்றது.


DFCC வங்கி தொடர்ந்தும் வளர்ச்சி கண்டு, புத்தாக்கங்களை வெளிக்கொண்டு வருகின்ற நிலையில், வங்கி மற்றும் தொழிற்துறையின் ஏனைய செயற்பாட்டாளர்களுக்கு நீண்ட கால வெற்றியை அடையப்பெறுவதில் நெகிழ்திறன், தகவமைப்பு மற்றும் வலுவான வாடிக்கையாளர் மைய அணுகுமுறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்துவதாக இவ்விருதுகள் காணப்படுகின்றன.


DFCC வங்கி பற்றிய விபரங்கள்


DFCC வங்கியானது 68 ஆண்டுகால வளமான வரலாற்றைக் கொண்ட முழுமையான
சேவைகளை வழங்கும் ஒரு வணிக வங்கி என்பதுடன், பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி
வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. அதன் நிலைபேற்றியல் மூலோபாயம் 2020-2030
இன் ஒரு பகுதியாக, வங்கியானது நெகிழ்திறன் கொண்ட வணிகங்களை தோற்றுவித்தல்
மற்றும் பசுமை நிதிவசதி மற்றும் நிலைபேண்தகு, சமூகப் பொறுப்புணர்வுள்ள
தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றை ஆதரிப்பதன் மூலம் மகத்தான நெகிழ்திறனுக்கு
பங்களிப்பதில் ஒரு முன்னணி நிறுவனமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஐக்கிய
இராச்சியத்தின் Global Brands சஞ்சிகையால் 2021 இல் இலங்கையில்  Most Trusted Retail
Banking Brand மற்றும் Best Customer Service Banking Brand மற்றும் Euromoney இன்
Market Leader and Best in Service in Cash Management 2022 and 2023 உட்பட பல
பாராட்டுக்களையும், அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது. மேலும், DFCC வங்கியானது
Business Today சஞ்சிகையால் இலங்கையின் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்களின்
தரவரிசையிலும் பெயரிடப்பட்டுள்ளதுடன், Fitch Ratings Lanka Limited ஆல் A- (lka)
தரப்படுத்தப்பட்டு, இலங்கை மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது.


நிலைபேற்றியலுக்கான அதன் அர்ப்பணிப்பிற்கு சான்றளிக்கும் வகையில், இலங்கையில் பசுமை காலநிலை நிதியத்தின் (Green Climate Fund - GCF) அங்கீகாரத்தைப் பெற்ற முதன்முதலான மற்றும் தற்போது வரையான ஒரேயொரு நிறுவனம் DFCC வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு முழுவதும் காலநிலைத் தணிவிப்பு மற்றும் அது சார்ந்த மாற்றத்தை உள்வாங்கும் செயல்திட்டங்களுக்கு ஆதரவாக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான சலுகை நிதியைப் பெறுவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.
 

Comments
0

MOST READ