செய்திகள்
தரங்கவின் பிடியாணை தொடர்பில் வௌியான நீதிமன்றின் உத்தரவு

Oct 30, 2024 - 12:47 PM -

0

தரங்கவின் பிடியாணை தொடர்பில் வௌியான நீதிமன்றின் உத்தரவு

ஆட்ட நிர்ணய வழக்கில் ஆஜராகாதமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை மீளப்பெறுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் போது மாத்தளை மேல் நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாக உபுல் தரங்க தனது சட்டத்தரணிகள் ஊடாக வழங்கிய உறுதிமொழியை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


மாத்தளை நீதிமன்றால் தம்மைக் கைதுசெய்து ஆஜர்படுத்துவதற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி தரங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மொஹமட் லஃபர் தாஹிர் மற்றும் பி. குமரன் ரத்னம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05