மலையகம்
ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களுடன் நால்வர் கைது

Oct 30, 2024 - 01:12 PM -

0

ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களுடன் நால்வர் கைது

ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை வைத்திருந்த 4 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஹட்டன், டிக்கோயா, சாஞ்சிமலை பகுதியைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


கொழும்பில் தொழில்புரிந்த இவர்கள், தீபாவளி பண்டிகைக்காக தமது ஊர் பகுதிக்கு வந்துள்ளனர். அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.


இதன்போது ஐஸ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் என்பன அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


22 மற்றும் 28 வயதுகளுக்கிடைப்பட்ட குறித்த இளைஞர்கள், விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05