Oct 30, 2024 - 01:35 PM -
0
இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கான வங்கியின் விசாலமானதும் சக்தி வாய்ந்ததுமான நவீன டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளான ComBank Digital Enterprise Solutions இனது பிந்தைய சேர்க்கையாக பெரு நிறுவன வாடிக்கையாளர்களுக்காக Host-to-Host (H2H) கொடுப்பனவு சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
H2H என்பது கோர்ப்பரேட் கிளையண்ட் எண்டர்பிரைஸ் ரிசோர்ஸ் பிளானிங் (ERP) அமைப்புடன் நேரடியாக ஒருங்கிணைக்கும் ஒரு தானியங்கு மற்றும் பாதுகாப்பான தீர்வாகும். இது மேலும் வங்கிகள் மற்றும் அவற்றின் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இடையே இலத்திரனியல் தரவு பரிமாற்றத்தை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் பண பரிவர்த்தனைகள் மற்றும் அது தொடர்பான செயற்பாடுகளுக்கான கைமுறை செயல்முறைகளின் தேவையை நீக்குவதுடன் ஒட்டுமொத்த பரிவர்த்தனை நிர்வாகத்தை மிகவும் திறமையாகவும் நம்பகமானதாகவும் மாற்றுவதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிகள் மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு இடையே அதிக அளவு தரவு பரிமாற்றத்திற்கான ஒரு தானியங்கி தீர்வான இது வங்கியின் APP அல்லது இணைய இடைமுகத்தில் உள்நுழையாமல் H2H தீர்வு வாடிக்கையாளர்களை நிலையான தொழில் வடிவங்களில் கோப்புகளை உருவாக்கவும் மாற்றவும் அனுமதிக்கிறது மற்றும் SAP, Microsoft Dynamics, Oracle Cloud, Odoo, மற்றும் open-source ERP அமைப்புகள் உட்பட பல்வேறு ERP தளங்களை ஆதரிக்கிறது.
பாதுகாப்பான Host-to-Host ஒருங்கிணைப்புடன் கூடிய ComBank Digital Enterprise Solutions வர்த்தக வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரிக்கும் ஒரு ஒருங்கிணைந்த தளத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் வங்கியியலின் உதவிப் பொது முகாமையாளர் பிரதீப் பந்துவன்ச தெரிவித்தார். 'H2H ஆனது மொத்த பரிவர்த்தனைகள் மற்றும் ERP அமைப்பு மற்றும் வங்கி கூற்று அறிக்கைகளிடையே பணம் செலுத்துவதற்கான தானியங்கி ஒருங்கிணைப்பு ஆகியவற்றைத் தடையின்றி நடத்துவதற்கான வாய்ப்புகளுக்கான வசதியை வழங்குகிறது. மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து தரவுகளுக்கும் உடனடி அணுகலை வழங்குகிறது.
கொமர்ஷல் வங்கியின் H2H தீர்வு குறிப்பாக பணம் செலுத்துதல் சேகரிப்புகள் மொத்த கோப்பு பரிமாற்றங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் வர்த்தக திறன்களை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது இவை அனைத்தும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவிலான தரவுகளைக் கையாள்வதில் முக்கியமானவை. கொடுப்பனவுகள் தவிர தீர்வு தன்னியக்க தரவு பரிமாற்றம் வங்கியின் அமைப்பில் உள்நுழையாமல் ERP அமைப்பு மூலம் வங்கி கணக்கு விசாரணை LC பரிமாற்றம் மற்றும் வங்கியின் பல்வேறு கோரிக்கைகளை செயலாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
கொமர்ஷல் வங்கியின் பல பெருநிறுவன வாடிக்கையாளர்கள் ஏற்கனவே H2H சேவைகளுக்காக கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டலுடன் தங்கள் ERP அமைப்புகளை ஒருங்கிணைத்துள்ளனர் என்றும் பந்துவன்ச தெரிவித்தார். அதிக அளவிலான பரிவர்த்தனைகளைக் கையாளும் இந்த நிறுவனங்கள் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகள் நிகழ் நேரத் திறன்கள் மற்றும் H2H வழங்கும் மேம்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றிலிருந்து பெரிதும் பயனடைகின்றன இது அவர்களின் நிதியியல் செயல்பாடுகளை மிகவும் திறமையாகவும் திறம்படவும் நிர்வகிக்க அனுமதிக்கிறது.
கொமர்ஷல் வங்கி இலங்கையின் மிகப் பெரிய தனியார் துறை வங்கி மற்றும் உலகின் சிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை வங்கியாகும். கொமர்ஷல் வங்கி திறன்மிகு முறையில் அமையப்பெற்ற கிளை வலையமைப்புக்கள் மற்றும் 974 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது அங்கு வங்கி 20 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது.