Oct 30, 2024 - 01:59 PM -
0
பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதற்காக இன்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்று வருகிறது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம், முல்லைத்தீவு தேர்தல்கள் அலுவலகம், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான பொலிஸ் நிலையம், நட்டாங்கண்டல், ஜயன்கன்குளம், மல்லாவி , மாங்குளம், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, கொக்கிளாய் , வெலிஓயா ஆகிய பொலிஸ் நிலையங்களிலும் இன்று தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.
--