Oct 30, 2024 - 02:28 PM -
0
NDB வங்கியானது எதிர்காலத் தலைவர்களை வளர்ப்பதற்கும் அடுத்த தலைமுறையினரை வலுப்படுத்துவதற்குமான அதன் அர்ப்பணிப்பின் தொடர்ச்சியாக, வளர்ந்து வரும் பதின்ம வயது சுயதொழில்வாண்மையாளரும் செல்வாக்குமிக்கவருமான நெத்தில கமகே என்பவருக்கு, நாட்டின் இளைஞர்களிடையே நிதியறிவு மற்றும் சுயாதீனத்தை வளர்ப்பதில் வங்கியின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், NDB Pixel கணக்கை வழங்கியது.
கணிசமான செல்வாக்கு கொண்ட ஒரு இளம் சுயதொழில்வாண்மையாளராக , நெத்திலவின் பயணம் நிதியியல் ரீதியாக வலுவூட்டப்பெற்ற தலைமுறையை வளர்ப்பதற்கான NDBயின் பார்வையுடன் இணைந்துள்ளது. பதின்ம வயதினருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட NDB Pixel கணக்கை வழங்குவதன் மூலம், இளைஞர்களுக்கு அத்தியாவசியமான நிதியியல் கருவிகளை வழங்குவதை வங்கி இலக்காகக் கொண்டுள்ளது.
NDB Pixel கணக்கு என்பது இலங்கையின் இளைய தலைமுறையினரிடையே நிதியியல் சுதந்திரம் மற்றும் பொறுப்பான சேமிப்புப் பழக்கங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 13 முதல் 18 வயதுடைய இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தனித்துவமான எண்ணிம சேமிப்புக் கணக்காகும். கணக்கு வைத்திருப்பவர்கள் டெபிட் அட்டை வசதிகள் மற்றும் NEOS மொபைல் வங்கிக்கான அணுகல் மூலம் பயனடைகிறார்கள். மேலும் பலவிதமான வங்கிச் சேவைகளை அணுகும் போது பதின்வயதினர்கள் சேமிப்பதையும் எளிதாக்கும் இந்தக் கணக்கில் பிரத்தியேகமான விளம்பரச் சலுகைகளும் உள்ளன.
வளமான நாளைய தினத்திற்கு அவர்களே திறவுகோல் என்பதை உணர்ந்து, NDB வங்கியானது நெத்தில போன்ற பதின்ம வயதினரை அவர்களின் பணத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிக்கத் தேவையான நிதியியல் அம்சங்களுடன் சித்தப்படுத்த முயல்கிறது. எளிதான அணுகல், நவீன தொழில்நுட்பம் மற்றும் வடிவமைக்கப்பட்ட நிதிச் சேவைகள் ஆகியவற்றை இணைத்து, NDB Pixel நாட்டின் இளைஞர்களுக்கான நிதிப் பொறுப்பில் ஒரு தொடக்கத்தை வழங்குகிறது.