Oct 30, 2024 - 02:34 PM -
0
Sysco LABS அண்மையில் பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பயிலும் மாணவர்களுக்காக முன்னெடுக்கும் தனது Project Guiding Leadership and Outreach (GLO) திட்டத்தை நீடித்துள்ளதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதிலும் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் சமூகங்களில் மாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
GLO-சான்றளிக்கப்பட்ட Sysco LABS ஊழியர்களால் இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், ஸ்ரீ ஜயவர்தனபுர, கொழும்பு, களனி, ரஜரட்ட, பேராதனை மற்றும் SLIIT பல்கலைக்கழங்களின் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தது. ஐக்கிய நாடுகளின் 17 நிலைபேறான இலக்குகளுடன் பொருந்தும் வகையில் அமைந்திருப்பதுடன், Sysco LABS’ இன் பிரதான நோக்கு என்பது, ‘உணவு மற்றும் அரவணைப்பை ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு பகிர்ந்து கொள்ளும் வகையில் உலகை இணைப்பது’ ஆக அமைந்துள்ளது. சமூக சென்றடைவு மற்றும் நிலைபேறான விருத்தி ஆகியவற்றில் இளம் தலைமுறையினரை தயார்ப்படுத்தல் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
சமூக தலைமைத்துவம் மற்றும் அதன் தாக்கம் தொடர்பில் நிறுவனத்தின் வழிமுறை தொடர்பில் Sysco LABS இன் மக்கள் செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் ரெஹான் அந்தனிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இளைஞர்களின் அபிவிருத்திக்காக Project GLO’இன் முயற்சிகள் என்பது, புதிய தலைமுறை தலைவர்களுக்கு அவசியமான திறன்கள் மற்றும் அறிவை பெற்றுக் கொடுத்து அவர்களை தயார்ப்படுத்துவதாக அமைந்திருக்கும் என்பதுடன், அதனூடாக அவர்களின் எதிர்காலம் மற்றும் சமூகத்துக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த நிகழ்ச்சியினூடாக, பயிலல், கைகோர்ப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக இணைப்புகளை ஏற்படுத்தல் போன்றவற்றின் பெறுமதிகளை மீளுறுதி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இந்த திட்டத்தினூடாக, சிறந்த, நோக்குடனான தலைவர்களை உருவாக்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், அதனூடாக அவர்களால் தமது சமூகங்களில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக திகழ முடியும். எதிர்காலத்தில் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் முன்நோக்கி கொண்டு செல்ல நாம் எதிர்பார்ப்பதுடன், மாணவர்களுக்கு தமது செயற்திட்ட சிந்தனைகளை வெளிப்படுத்தக்கூடிய போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு, அதிலிருந்து இரு திட்டங்களை தெரிந்து அவற்றை நாம் ஊக்குவித்து கைகொடுப்போம்.” என்றார்.
இந்த ஆண்டின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு, Project GLO திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில், 26 பங்குபற்றுநர்களை ஈடுபடுத்தி அவர்களை பயிற்றுவிப்பதாக அமைந்துள்ளது. அதில் இதர முன்னணி நிறுவனங்களான Sysco LABS, Brandix, Fortude, IFS மற்றும் JKH போன்றவற்றின் பிரதிநிதிகளும் அடங்கியுள்ளனர்.
Sysco LABS பற்றி
Sysco LABS என்பது உலகின் மாபெரும் உணவுச் சேவைகள் வழங்கும் நிறுவனமான Sysco Corporation (NYSE: SYY) இன் புத்தாக்க பிரிவாகும். Sysco ஒரு Fortune 500 நிறுவனம் என்பதுடன், உணவுப் பொருட்களை உணவகங்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி நிலையங்கள், தங்குமிடங்கள் மற்றும் இதர வாடிக்கையாளர்களுக்கு விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை மேற்கொள்ளும் சர்வதேச ரீதியில் முன்னோடியாகத் திகழும் நிறுவனமாகும்.
உணவு சேவைகள் மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு அவசியமான சாதனங்கள் மற்றும் பொருட்களையும் கொண்டுள்ளது. 76000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு, உலகளாவிய ரீதியில் 330 க்கு அதிகமான ஸ்மார்ட் விநியோக பகுதிகளை இயக்குவதுடன், சுமார் 730,000 வாடிக்கையாளர் பகுதிகளுக்கு சேவைகளை வழங்குகின்றது. 2024 ஆம் ஆண்டு ஜுலை 1 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில், நிறுவனம் 78.8 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான விற்பனைகளை பதிவு செய்துள்ளது.
தொழில்நுட்ப ஆரம்ப நிறுவனம் எனும் வகையில் செயலாற்றும் இந்நிறுவனத்தை நிபுணத்துவம் வாய்ந்த தொழிற்துறை முன்னோடிகள் வழிநடத்துகின்றனர். கொழும்பு, இலங்கை, ஹைதராபாத், இந்தியா, கொஸ்டா ரிகா மற்றும் ஒஸ்டின் மற்றும் ஹுஸ்டன், டெக்சஸ் ஆகிய பகுதிகளில் பொறியியல் அணிகளைக் கொண்டு, தொழிற்துறையில் புரட்சியை தோற்றுவிக்கும் வகையில் நிறுவன-தர தொழில்நுட்ப கட்டமைப்பை Sysco இன் கட்டமைப்புகள் வலுவூட்டுகின்றன.
Sysco LABS தொழில்நுட்பம் தற்போது உணவு தயாரிப்புகள், வர்த்தக நாமமிடல்கள், களஞ்சியப்படுத்தல் மற்றும் களஞ்சியசாலை செயற்பாடுகள், ஓடர் மேற்கொள்ளல்கள் மற்றும் விலையிடல்கள், உணவு மற்றும் பொருட்களை Sysco இன் சர்வதேச வலையமைப்புக்கு விநியோகித்தல், வாடிக்கையாளரின் உணவகத்தில் உணவருந்தும் அனுபவம் மற்றும் பலவற்றில் வெளிப்பட்டுள்ளது.